சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானாவில் இருந்து அய்யப்பன் கோவில் செல்லும் வழியில் சாலை நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அதில் விழுந்து படுகாயம் அடைகின்றனர். இதுகுறித்து பலமுறை பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உயிர் பலி ஏற்படும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-கணேசன், சேலம்.