சேலம் மாவட்டம் வாழப்பாடி- கடலூர் முக்கிய சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் சேலம்- கள்ளக்குறிச்சி செல்லும் பெரும்பாலான பஸ்கள் வாழப்பாடி ஊருக்குள் வராமல் நெடுஞ்சாலையிலே செல்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, சேலம்.