ஆபத்தான பள்ளம் மூடப்படுமா?

Update: 2023-06-14 12:32 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் வாசலில் இருந்து ஆற்றங்கரைக்கு செல்லும் சாலையில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைகின்றனர். இதன் காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்