மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் செடி, கொடிகள் வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் சாலையோரம் குடியிருப்பவர்கள் கோவில் சுற்றுச்சாலையை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கோவிலை சுற்றி உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ஆக்கூர்