சேலம் அம்மாப்பேட்டை ரவுண்டானாவில் இருந்து பட்டைக்கோவில் வரையும், சேலம் தேவேந்திரபுரம் 1, தேவேந்திரபுரம் 2 ஆகிய பகுதிகளிலும் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் இந்த சாலைகளில், பொதுமக்கள், வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகிறார்கள். மேலும் மழைக்காலங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேலாயுதம், சேலம்.