சேலம் சுந்தர் லாட்ஜில் இருந்து முள்ளுவாடி கேட் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அருகே செல்லும் சாலை மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும், புழுதி பறப்பதாலும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தோடு சென்று வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி அதிகாரிகள் சாலையை புதுப்பிக்க முன்வரவேண்டும்.
-முகமது, சேலம்.