மயிலாடுதுறையிலிருந்து வைத்தீஸ்வரன் கோவில் செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொதுமக்கள் மயிலாடுதுறை