மயிலாடுதுறை மாவட்டம் , தரங்கம்பாடி தாலூகாவை சேர்ந்தது அப்புராசபுரம்புத்தூர் என்ற கிராமம். அப்புராசபுரம்புத்தூர் கிராம மக்கள் சிறு வேலையாக இருந்தால் கூட ஆக்கூருக்குத்தான் வரவேண்டும் ஆனால் ஆக்கூர்-அப்புராசபுரம்புத்துர் சாலையின் இரண்டு புறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கூர்-அப்புராசபுரம்புத்தூர் ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தரங்கம்பாடி