சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சீலநாயக்கன்பட்டி பைபாஸ் செல்லும் வழியில் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் நிறுத்தம் அருகே சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. வாகன ஓட்டிகள் அடிக்கடி அந்த பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.
-சுதர்சனன், சேலம்.