குண்டும்,குழியுமான சாலை

Update: 2023-04-30 10:26 GMT

திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடியில் இருந்து பொன்னேரி வழியாக அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருபவர்களும் குண்டும்,குழியுமான சாலையினால் அவதிக்குள்ளாகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் மழைநீரும் தேங்கி நின்று பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தரவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்