சேலம் பெரமனூர் 40 அடி ரோட்டில் சாலை அமைப்பதற்காக சாலையின் ஒரு பகுதியில் தோண்டப்பட்டது. சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் தற்போது அந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-அம்பேத்கர், பெரமனூர், சேலம்.