சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வனவாசி பஸ் நிறுத்தம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அதன் அருகிலேயே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்த பகுதியில் 4 ரோடுகள் சந்திக்கின்றன. எனவே ஜலகண்டாபுரம்-நங்கவள்ளி மெயின் ரோட்டில் வேகத்தடை இல்லாத காரணத்தினால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. விபத்து ஏற்படுவதற்கு முன்பு வேகத்தடை அவசியம் அமைக்க வேண்டும்.
-அர்ஜூன், வனவாசி, சேலம்.