சேலம் அன்னதானப்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து தியேட்டர் வரை பாதாள சாக்கடைக்காக சங்ககிரி மெயின் ரோட்டில் குழி தோண்டப்பட்டது. பணிகள் முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள், முதியோர்கள் சைக்கிளில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே பெரிய அளவில் விபத்துகள் நடப்பதற்கு முன்பு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாகுல் அமீத் கான், அன்னதானப்பட்டி, சேலம்.