சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா கங்காணிப்பட்டி 4-வது வார்டு மானத்தாள் கிராமத்தில் உள்ள தார்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கண்காணிப்பட்டி ஊர் பொதுமக்கள் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி தான் அவர்களுடைய தோட்டத்திற்கும், வீட்டுக்கும் சென்று வருகின்றனர். மேலும் பள்ளி குழந்தைகள் வாகனமும் சுற்றி தான் வருகிறது. இந்த சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-கங்கை, கங்காணிப்பட்டி, சேலம்.