சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 4 ரோடு வரையுள்ள சாலை ஒருவழிப்பாதையாக உள்ளது. இந்த சாலையில் ஆங்காங்கே சிறு சிறு பள்ளங்கள் உள்ளன. வாகனங்கள் ஒன்றுக்கு பின்னால் ஒன்று செல்லும் போது இருசக்கர வாகனங்கள் அந்த பள்ளங்களில் சிக்கி நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. இதனால் காலை, மாலை நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. எனவே முக்கியமான இந்த சாலையில் பள்ளங்களை சீரமைத்து நல்ல தரமான சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சஞ்சய், சேலம்.