சேலம் 6-வது வார்டு ராம் நகர் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் உள்ள பழுதான தொலைபேசி கம்பத்தை அகற்றாமல் ரோடு போட ஜல்லிகற்களை பரப்பி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த தொலைபேசி கம்பத்தை அகற்றி சாலை அமைக்க வேண்டும்.
-சேகர், ராம் நகர், சேலம்.