சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-01 17:53 GMT

சேலம் மாவட்டம் மாரமங்கலத்துப்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட பகுதியான சேலத்தில் இருந்த தாரமங்கலம் செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து கணபதி நகர், பொன் நகர், ஓம் சக்தி நகர் செல்ல இணைப்பு சாலை அமைத்து பல வருடங்கள் ஆகிறது. தற்போது இந்த சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கண்ணன், இரும்பாலை, சேலம்.

மேலும் செய்திகள்