சேலம் கந்தம்பட்டி பகுதியில் இருந்து சித்தர் கோவில் வரை உள்ள சாலையில் இருசக்கர வாகனங்கள், கார்கள் அதிகம் செல்கின்றன. இந்த சாலை அகலமாக இருந்தது. தற்போது சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் குறுகி காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
-ரமேஷ், சிவதாபுரம்.