மங்களூரு அருகே சூரத்கல் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன. தற்போது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையொட்டி உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.
சாலையில் ஒரு அடிக்கு மேல் குழி விழுந்து உள்ளது. இதனால் லாரி டிரைவர்கள் கடும் சிரமம் அடைந்து உள்ளனர். அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?