வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-12-11 17:27 GMT

சேலம் மாவட்டம் கொளத்தூர் தாலுகா சிங்கிரிப்பட்டி ஊராட்சியில் இந்திராநகர் கவுண்டர் தெருவில் இருந்து சிந்தாமணிக்காடு வரை செல்லும் தார் சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாைல பராமரிக்கப்படாததால் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்லும் விவசாயிகள், பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சாலையை சீரமைப்பார்களா?

-சென்ன கிருஷ்ணன், சிங்கிரிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்