இணைப்பு சாலையின் மோசமான நிலை

Update: 2022-12-11 14:13 GMT

பெங்களூரு மடிவாளாவில் இருந்து சர்ஜாப்புராவுக்கு வெளிவட்ட சாலை செல்கிறது. இந்த சாலையில் எச்.எஸ்.ஆர். லே-அவுட் 1-வது செக்டார் அகரா கிராமம் பகுதியில் இணைப்பு சாலையும் உள்ளது. இந்த இணைப்பு சாலை கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. அதாவது சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து மணலாக கிடப்பதுடன், பள்ளமும் விழுந்துள்ளது.

இதன்காரணமாக அந்த இணைப்பு சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இணைப்பு சாலை பயன்படுத்தாமல் முக்கிய சாலையில் வாகன ஓட்டிகள் செல்வதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இதை சரிசெய்ய இணைப்பு சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்