பெங்களூரு பி.சி.ரோட்டில் பலேபேட் கிராஸ் பகுதியில் உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு, அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.
இதனால் அந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் ஏறி, இறங்கும்போது தவறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலை பள்ளங்களை சீரமைத்து கொடுக்க வேண்டும்.