பெங்களூருவில் பெய்து வரும் மழையால் மகாதேவபுரா தொகுதியில் உள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மகாதேவபுராவில் பெரும்பாலான சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் சாலையில் நடந்து செல்ல முடியாமல் பாதசாரிகள் கடும் அடைந்து உள்ளனர்.
சேறும், சகதியுமான சாலைகளில் வாகனங்கள் மெதுவாக செல்வதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. சாலைகளை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.