சேலம் மாவட்டம் மேச்சேரி தாலுகா மல்லியகுந்தம் பகுதியில் அரசு கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சூரியனூர், கச்சராயனூர், ஆரியக்கவுண்டனூர், திப்பரத்தாம்பட்டி, நரியனூர், உப்புபள்ளம், குப்பகாளிப்பட்டி, வேங்கானூர் ஆகிய இடங்களில் இருந்து கால்நடைகளை மல்லிகுந்தம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். இந்த மருத்துவமனைக்கு செல்லும் இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுந்தரராஜன், கச்சராயனூர், சேலம்.