சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா பி.என்.பட்டி பேரூராட்சி 8-வது வார்டு டி.எம்.பி.நகர் (சின்னய ரெட்டி தெரு பகுதி) சாலை சேறும், சகதியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் எப்போதும் மழைநீர் தேங்கிய படியே உள்ளதால் கொசு உற்பத்தி ஆகி பல்வேறு நோய் தொற்றுகளுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். மேலும் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-சீரங்கன், பி.என்.பட்டி, சேலம்.