சேலத்தில் இருந்து கோரிமேடு வழியாக செட்டிச்சாவடி பகுதிக்கு திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு சேலம் மாநகராட்சி உட்பட்ட பகுதியிலிருந்து கனரக வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரித்து கொண்டு வரப்படுகின்றன. இந்தநிலையில் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் பல்வேறு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரிவதில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்.
-மாரியப்பன், சேணை கவுண்டனூர், சேலம்.