சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-14 14:09 GMT

பெங்களூரு சர்ஜாபுரா ஜன்னசந்திரா ரோடு மாருதி லே-அவுட் பகுதியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் உள்பட ஏராளமான நிறுவனங்கள் உள்ளது. இதனால் நிறுவனங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சமீபகாலமாக அந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளித்து வருகிறது.

மேலும் சாலையில் நடுவே பெரிய பள்ளமும் விழுந்து உள்ளது. அந்த சாலையில் வாகனங்களை வாகன ஓட்டிகள் மெதுவாக இயக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்