சுடுகாட்டுக்கு சாலை அமைக்க வேண்டும்

Update: 2022-09-14 12:37 GMT


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சியில் பண்டாரவடை, ஆதினங்குடி,தென்பிடாகை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொது சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல மிகவும் சிரமம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுடுகாட்டிற்கு சாலை அமைத்து தர வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருமருகல்

மேலும் செய்திகள்