ஊத்தங்கரை ஒன்றியம் நொச்சிப்பட்டி ஊராட்சி கல்லூர் கிராமத்தில் பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடம் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் இயற்கை உபாதைக்காக திறந்தவெளியை பயன்படுத்துகிறார்கள். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதிமக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய சுகாதார வளாகத்தை கட்டி தர வேண்டும்.
-சாமிநாதன், கல்லூர்.