தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2024-09-01 09:16 GMT

பந்தலூர் அருகே கல்லட்டி பகுதியில் உள்ள சாலையோரத்தில் வளைவான பகுதியில் ஆபத்தான பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாய சூழல் காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். அங்கு எச்சரிக்கை பலகைகள் எதுவும் இல்லை. மேலும் தடுப்புச்சுவரும் இல்லை. எனவே அங்கு தடுப்புச்சுவர் அமைப்பதோடு எச்சரிக்கை பலகையும் பொருத்த வேண்டும்.

இந்திரஜித், கல்லட்டி.

மேலும் செய்திகள்