பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் கூட்டுறவு வங்கி, உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. அங்கு செல்லும் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஆங்காங்கே மேல்மூடி இல்லாமல் திறந்து நிலையிலும், உடைந்தும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் தவறி கால்வாயில் விழும் நிலை உள்ளது. மேலும் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் தொல்லை அதிகரிப்பதால், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய்க்கு மேல் மூடி அமைப்பதோடு, கால்வாயை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.