கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கீழ்குப்பம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சரியான முறையில் பராமரிப்பு இல்லாததால் இந்த கட்டிடம் பாழடைந்து காணப்படுகிறது. தண்ணீர், மின்சாரம் வசதி இல்லை. இதனால் பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே ஊராட்சியில் ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகத்தை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், ஊத்தங்கரை