ஆரணி காந்திநகரில் கார்த்திகேயன் சாலையில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அந்தப் பகுதியில் மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளிக்கிறது. அங்கு வரும் நோயாளிகள், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மதிவாணன், ஆரணி.