வடிகால் பணிகள் விரைவாக முடிக்கப்படுமா?

Update: 2022-08-07 15:00 GMT
பெங்களூரு மல்லேசுவரம் பகுதியில் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் உள்ள கழிவுநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த சாலையில் உள்ள பழைய வடிகால் கற்களை உடைத்து சாலையில் போட்டுள்ளனர். அந்த கற்கள் சாலை முழுவதும் பரவி கிடக்கிறது. இதனால் அந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். மேலும், அதிவேகமாக அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் கற்களில் ஏறி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கற்களை அப்புறப்படுத்திவிட்டு, வடிகால் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்