நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2023-07-05 15:02 GMT
பெங்களூரு ஜெயநகர் 4-வது பிளாக், ஜெயின் கோவில் அருகே நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையின் ஓரங்களில் தள்ளுவண்டி வைத்து வியாபாரிகள், பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை வைப்பதால், பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. இதனால் அவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற
வேண்டும்.

மேலும் செய்திகள்