சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா சித்தூர் ஊராட்சியில் சமுதாயக்கூடம் பாழடைந்து உள்ளது. மேலும் கழிவறை பீங்கான்கள் உடைந்தும், கழிவுநீர் தேங்கி விஷப்பூச்சிகள் வசிக்கும் இடமாக சமுதாயக்கூடம் மாறி உள்ளது. எனவே சமுதாயக்கூடத்தை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
-புதியவன், சித்தூர்.