பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் 12-வது கிராஸ் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபாதையில் கட்டிட கற்கள் குவிக்கப்பட்டன. ஆனால் அந்த கற்கள் இன்றுவரை அகற்றப்படவில்லை. இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. மேலும் அவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையில் கிடக்கும் கட்டிட பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும்.