பெங்களூரு எமலூர் பகுதியில் மாரத்தஹள்ளி சந்திப்பு உள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் கொண்ட இந்த சந்திப்பு பகுதியில் பாதசாரிகள் கடக்கும் இடம் (சீப்ரா கிராசிங்) அமைக்கப்பட்டுள்ளது. அதை அடையாளப்படுத்தும் விதமாக அங்கு வெள்ளை கோடுகள் போடப்பட்டு இருக்கும். தற்போது அந்த கோடுகள் மறைந்துவிட்டதால், தற்போது அங்கு சாலையை கடப்பதற்கு பாதசாரிகள் பெரும் அவதி அடைகின்றனர். சில நேரங்களில் அவர்கள் விபத்திலும் சிக்குகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார், அந்த சாலையில் பாதசாரிகள் வசதிக்காக வெள்ளைக்கோடுகள் அமைத்து கொடுக்க வேண்டும்.