நடவடிக்கை வேண்டும்

Update: 2023-02-08 15:15 GMT

சேலம் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் இரண்டு தனியார் கல்குவாரிகள் இயங்குகின்றன. கல்குவாரியில் இருந்து வெளியே வரும் லோடு வாகனங்கள் தார்பாய்கள் இல்லாமல் இயக்கப்படுகின்றன. இதனால் மணல் துகள்கள் காற்றில் பறந்து சாலையோரம் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கண்களில் விழுகிறது. இதனால் குழந்தைகள், வயதானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே கல்குவாரியில் இருந்து வெளியே வரும் லோடு வாகனங்களில் தார்ப்பாய்கள் போர்த்தி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்பொதுமக்கள், கடம்பூர், சேலம்.

மேலும் செய்திகள்