திறக்கப்படாத கழிப்பிடம்

Update: 2023-01-04 16:27 GMT

சேலம் ஊராட்சி ஒன்றியம் வட்ட முத்தாம்பட்டி ஊராட்சி, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிப்பவர்களுக்காக பொது சுகாதார கழிப்பிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மேலும் இந்த சுகாதார வளாகம் வேலை முடிவு பெறாமல் இருந்தது. இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முடிக்கப்பட்டது. ஆனாலும் இந்த பொது சுகாதார கழிப்பிடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இன்னும் திறக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொது சுகாதார கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

-மங்களம் ராஜா, வட்ட முத்தாம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்