போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்

Update: 2023-01-04 14:01 GMT


மயிலாடுதுறை மாவட்டம் கடைத்தெருவில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனங்கள் மாடுகள் மீது மோதி வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. இதன்காரணமாக வாகனங்கள் சேதமடைகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மயிலாடுதுறை, பொதுமக்கள்

மேலும் செய்திகள்