சேலம் ஏற்காடு அடிவாரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து தனியார் பள்ளி செல்லும் சாலையில் உள்ள மண் திட்டுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் அமர்ந்து மது குடிக்கின்றனர். இப்பகுதியில் 3 பள்ளிகளும், ஒரு கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. மதுபிரியர்களால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து சென்று மதுபிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த், ஏற்காடு, சேலம்.