சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதி தும்பிபாடி ஊராட்சி கெண்டபெரியான் வலசு பகுதியில் சாலையில் சரபங்கா நீர் ஓடுகிறது. சாலையே தெரியாத அளவுக்கு நதிநீர் தேங்கி இருப்பதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி குழந்தைகள் ஆபத்தான நிலையில் நடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நதியில் தேங்கியிருக்கும் நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவா, கெண்டபெரியான் வலசு, சேலம்.