பெங்களூரு நாகேனஹள்ளி கேட் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பணிகள் நடந்தது. அப்போது மின்கம்பங்கள், மரங்கள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணி நடந்த இடத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி, அரசு நிலத்தை ஆக்கிரமித்து பள்ளியின் முன்பு பெரிய அறிவிப்பு பலகை வைத்து உள்ளது.
இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மின்கம்பங்கள், மரங்களை அகற்றிய அதிகாரிகள், பள்ளி வைத்து உள்ள பலகையை அகற்றுவது எப்போது?.