சாலையை ஆக்கிரமித்து நிறுத்தபட்ட கார்கள்

Update: 2022-12-21 15:21 GMT

பெங்களூரு மாகடி ரோடு வெங்கடேஸ்வரா நகரில் கார்களை வாங்கி, விற்கும் ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிறுவனம் விற்பனைக்காக வந்துள்ள கார்களை சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அந்த வழியாக மற்ற வாகனங்கள் விரைந்து செல்ல முடியாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து நிறுவன ஊழியர்களிடம் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. சாலையை ஆக்கிரமித்து உள்ள கார்களை வேறு இடத்தில் நிறுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்