பெங்களூரு கோரமங்களா பகுதியில் 80 அடி சாலை 6-வது பிளாக் பகுதியில் சாலையோ நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்றது.
இதற்காக அந்த நடைபாதையில் கட்டுமான பொருட்கள் போடப்பட்டு இருந்தது. ஆனால் பல நாட்கள் ஆகியும் இன்றுவரை அந்த பொருட்கள் அப்புறப்படுத்தாமல் உள்ளது. இதனால் பாதசாரிகள் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் அந்த கட்டுமான பொருட்களை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.