பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் 18-வது கிராஸ் ரோட்டில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து தங்களது வாகனங்களை நிறுத்தி உள்ளனர். இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவன அதிகாரிகளிடம், பொதுமக்கள் கூறியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்த பிரச்சினையை சரிசெய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?