அறிவிப்பு பலகை வைக்கப்படுமா?

Update: 2022-11-27 13:54 GMT

பெங்களூரு ஜெயநகர் 4-வது பிளாக் 20-வது கிராஸ் 10-வது 'ஏ' மெயின் ரோட்டில் ஒரு வழி பாதை உள்ளது. ஆனால் அது ஒரு வழி பாதை என்பதை குறிக்கும் வகையில் அங்கு அறிவிப்பு பலகை இல்லை. இதனால் அந்த சாலையில் எதிர்திசையில் இருந்து வரும் வாகனங்கள் சென்று விடுகின்றன.

இதனால் குறுகலான அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு உண்டாகிறது. இதனை தவிர்க்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்படுமா?

மேலும் செய்திகள்