பெங்களூரு கே.ஆர்.புரம் ஹூடியில் இருந்து அய்யப்பநகருக்கு செல்லும் சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் அந்த குழியில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
குழி தோண்டப்பட்டு இருப்பதால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அந்த குழியை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.