பெங்களூரு வசந்த்நகர் 1-வது கிராஸ் 12-வது மெயின் ரோட்டில் ஒரு கட்டிடம் கட்டும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறது. இதனால் அந்த கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பொருட்கள் கொண்டு வரப்பட்டு சாலையில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
கட்டுமான பொருட்களை சாலையோரம் வைக்கும்படி வாகன ஓட்டிகள் கூறியும் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த நிறுவனம் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?